கூடிப் பிரியாதே
முள் மீது சேலை விழுந்தாலும், சேலை மீது முள் விழுந்தாலும் பாதிப்பு என்னவோ சேலைக்கு தான்..
ஆனால் ஒருபோதும் என்னை சேலையாக எண்ணாதே .. உன் எண்ணத்தை என் மீது திணிக்காதே.
உன் எண்ணத்தை மாற்றிக் கொள்.. பிறரை மதிக்க கற்றுக்கொள்.
பெண்ணியம் போற்று என கூறவில்லை.. "மனிதம்" என்ற ஒன்றை மட்டும் புரிந்துகொள்.
எனக்கும் மனம் என்ற ஒன்று இருக்கிறது..அதன் குணம் அறியாமல் காயப்படுத்தாதே..
என்றோ ஓர் நாள் இது புரியும் என்ற நம்பிக்கையுடன்..
உனது நலம் விரும்பும் "தோழி"
Comments
Post a Comment